முச்சந்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபரிடமும் விசாரணை நடத்த வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவையும் விசாரணைக்குட்படுத்தி வாக்குமூலம் பெறவேண்டுமென முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட சதி இருப்பதாக தாம் பதவியிலிருந்து விலகிய நாளன்று பகிரங்கமாகக் கூறிய முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அரசாங்கம் இதுவரை தவறிவிட்டது எனவும் விஜயதாச ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இவ்விடயத்தை உன்னிப்பாகக் கவனித்து நீதியைக் கோரி வரும் ஒரு சூழலில், முன்னாள் சட்டமா அதிபரிடம் இதுவரை விசாரணை நடத்த அரசாங்கம் தவறியிருப்பது ஒரு பெரும் குறைபாடாகும் என்றும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button