பலதும் பத்தும்

மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை ; யாசகம் கோரும் ரோபோ

சீ​னா​வில் ஒரு ரோபோ தெரு​வில் மண்​டி​யிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவரு​கிறது. சீனா​வின் ஹாங்சோ நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறு​வனம் செயல்​படு​கிறது.

இந்த நிறு​வனம் மனித வடிவி​லான ரோபோக்​களை உற்​பத்தி செய்து வரு​கிறது. இந்த ரோபோக்​கள் பெரும்​பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தீயணைப்பு உள்​ளிட்ட பேரிடர் மீட்​புப் பணி​களி​லும் இவை ஈடு​படுத்​தப்​படு​கின்​றன.

மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை…
யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் தனது ரோபோக்​களை மக்களிடம் பிரபலப்​படுத்த நூதன விளம்​பரத்தை மேற்​கொண்டு வருகிறது.

இதன்​படி சீனா​வின் சிச்​சு​வான் மாகாண தலைநகர் செங்​டூ​வின் பிர​தான சாலை​யில் யூனிட்ரீ நிறு​வனத்​தின் ஒரு ரோபோ, கியூஆர் கோடு அட்​டை​யுடன் யாசகம் கோரி வரு​கிறது. இந்த ரோபோ மண்​டி​யிட்டு அமர்ந்​து, கைகளை கூப்பி யாசகம் கோரு​கிறது.

‘‘மின்​சார கட்​ட​ணத்தை செலுத்த பணம் இல்​லை யாசகம் அளித்து உதவுங்​கள்’’ என்று ரோபா உருக்​க​மாக கூறுகிறது.

யாசகம் எடுக்​கும் இந்த ரோபா​வின் வீடியோ வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. செங்டூ மட்​டுமன்றி தலைநகர் பெய்​ஜிங் உள்​ளிட்ட நகரங்​களி​லும் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறு​வனம் சார்பில் இதே பாணி​யில் நூதன விளம்​பரம் மேற்​கொள்​ளப்​பட்​டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button