பலாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா ; ஆச்சரியமூட்டும் தகவல்கள்

கோடை கால சீசன் பழங்களுள் தனித்துவமான இடம் பலாப்பழத்துக்கு உண்டு. இது வெப்பமண்டலப் பழம் மட்டுமல்ல, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். ஏனெனில் வியக்கத்தக்க வகையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது.
இந்த பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கலைத் தடுக்கவும். சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும். குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவும்.
செரிமானம் சீராக நடைபெறவும் வழிவகை செய்வதுடன் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வையும் தருகின்றது. விட்டமின் சி அதிகம் கொண்டுள்ள இது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும்.
நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். இதயத்திற்கு அழுத்தம் ஏற்படுவதை குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்க துணை புரியும்.
மேலும் பலாப்பழத்தில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகின்றது. மிதமாக உண்ணும்போது, இரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர்வதை தடுக்க உதவுகின்றது.
வீட்டிற்குள் பேயால் பாதுகாக்கப்படும் புதையல் ; கோவிலுக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த ஷாக் ; இறுதியில் அம்பலமான தகவல்
வீட்டிற்குள் பேயால் பாதுகாக்கப்படும் புதையல் ; கோவிலுக்கு சென்ற பெண்ணிற்கு காத்திருந்த ஷாக் ; இறுதியில் அம்பலமான தகவல்
குறிப்பாக, இளம் பலாப்பழத்திலுள்ள சத்துக்கள், சைவம் மற்றும் பன்றி அல்லது கோழி இறைச்சிக்கு மாற்றாகவும் அமைகின்றது.
பலாப்பழத்தில் கரோட்டினாய்டுகள் மற்றும் பிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. இவை செல்களை ஆன்டி ஆக்சிடென்ட் அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையை தடுக்கவும் துணை புரிகிறது.
விசேடமாக பொட்டாசியம், மெக்னீசியம், கல்சியம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவற்றையும் பலாப்பழம் கொண்டுள்ளதால், இவை இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
![]()