பலதும் பத்தும்

வேர்க்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வேர்கடலை

சத்துக்கள் அதிகம் கொண்ட வேர்கடலை விலை குறைவாக உள்ளதால், நடுத்தர மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதுடன், அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வையும் அளிக்கின்றது. ஆனால் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், இதனை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது?

வேர்க்கடலை சாப்பிட்டதும், தோல் அரிப்பு, வீக்கம், தடிப்பு, மூச்சு திணறல் போன்ற அலர்ஜி இருப்பவர்கள் வேர்க்கடலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வேர்க்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Which Person Avoid Peanuts Do You Know Reason

 

செரிமான பிரச்சனை, வாயு தொல்லை, வயிறு வலி, அசிடிட்டி, அஜீரண பிரச்சனை உள்ளவர்களும் வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் அதிகப்படியான கொழுப்பு செரிமானத்தை மேலும் மெதுவாக்கும்.

வேர்க்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Which Person Avoid Peanuts Do You Know Reason

புரதச்சத்து அதிகம் கொண்ட வேர்க்கடலையை யூரிக் அமிலம் மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கவும். மேலும் யூரிக் அமிலத்தை அதிகரித்து வாதம் மற்றும் மூட்டு வலியை அதிகப்படுத்தும்.

வேர்க்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Which Person Avoid Peanuts Do You Know Reason

அதே போன்று கல்லீரல் மற்றும் கணைய பிரச்சனை உள்ளவர்கள் வேர்க்டலையை தவிர்க்கவும். இதிலுள்ள கொழுப்பு கல்லீரலுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துமாம்.

வறுத்த வேர்க்கடலையில் அதிக உப்பு இருக்கும் என்பதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்க் தவிர்க்கவும்.

வேர்க்கடலையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? | Which Person Avoid Peanuts Do You Know Reason

வேர்க்கடலையை சாப்பிட விரும்புவர்கள் அதனை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. நாள் ஒன்றிற்கு சுமார் 28 முதல் 30 கிராம் எடுத்துக்கொள்ளலாம்.

காலை மற்றும் மாலை வேளை தான் வேர்க்கடலையை சாப்பிட சிறந்த நேரமாகும். ஆனால் தூங்க செல்லும் போது இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் செரிமானம் மெதுவாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button