இலங்கை

பிரித் ஓதி ஞானசாரர் சிறைக்கு அனுப்பிவைப்பு; நீதிமன்ற வாயிலில் கூடிய பிக்குகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், வேறு வழக்கொன்றிற்காக நேற்று புதன்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற வாயிலில் கூடியிருந்த பிக்குகள் கூட்டமாக பிரித் ஓதி ஞானசார தேரரை சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு, காவி உடடைக்கு பதிலாக சிறைக்கைதிகளின் உடையே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பௌத்த அமைப்புகள் அவருக்கு மீண்டும் காவி உடையை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

இதன்படி நேற்று அவர் வேறு வழக்கொன்றுக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அதன்போது நீதிமன்றத்திற்கு முன்னால் பெருமளவிலான பிக்குகள் கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதேவேளை வழக்கு விசாரணைகள் முடிவடைந்து அவரை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வெளியே அவரை அழைத்து வந்தபோது சிறைச்சாலை வாயிலுக்கு சென்ற பெருமளவிலான பிக்குகள் ஞானசார தேரருக்கு ஆசி வேண்டி பிரித் ஓதினர். பின்னர் அவர் சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றிய போது பஸ்ஸுக்குள் காவியுடையொன்று வீசப்பட்டதுடன், அதனை அணிந்துகொள்ளுமாறு வெளியில் இருந்த பிக்குகள் ஞானசார தேரரை பார்த்து கூறினர்.

பிக்குகள் நடத்திய இந்தப் போராட்டத்தால் புதுக்கடை நீதிமன்ற வளாக பகுதிகளில் பதற்றமான நிலைமை நிலவியது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *