உலகம்

அமெரிக்க – ஈரான் பேச்சு தொடர்கிறது – ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல்

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடருகின்றது.

இந்த பேச்சுவார்த்தையானது இரவு முழுவதும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

60 நாட்களுக்குள் ஒப்பந்தத்தை எட்டுவது என்று கடந்த வாரம் எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, அமெரிக்கா- ஈரான் இடையேயான இந்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, தெற்கு லெபனானில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ஈரானிடமிருந்து வந்த குழப்பமான தகவல்களை தெளிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, லெபனானில் இஸ்ரேலுடன் தொடர்ந்து நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் கட்டுப்படுத்தாவிட்டால், அதன் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

இந்த எச்சரிக்கையை நிராகரித்த ஈரான், தாம் போரிடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

சுவிஸ் நகரான லூசர்னில் சந்தித்து வரும் இரு நாட்டுப் பிரதிநிதிகளும், இன்றையப் பணியை, இனிவரும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்துவார்கள் என்று அந்த அமெரிக்க தூதர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button