உலகம்

எனக்குப் பிடிக்கவில்லை என்றால் ஈரான் தலையில் குண்டு வீசுவோம்; ட்ரம்ப்

இந்த ஒப்பந்தம் இறுதி முடிவல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்களைச் (ஈரான்) சுடுவோம். அவர்கள் தலையில் குண்டுகளை வீசுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (17) பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியதாகவும், வரும் ஜூன் 19 ஆம் திகதி அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறுகின்றது. ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, எகிப்து அரபு குடியரசின் ஜனாதிபதியுடன் ட்ரம்ப் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலில் டிரம்ப் பேசியதாவது: இந்த ஒப்பந்தம் இறுதி முடிவல்ல. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்களைச் (ஈரான்) சுடுவோம். அவர்கள் தலையில் குண்டுகளை வீசுவோம்.

அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால், மீண்டும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். ஏனென்றால் அவர்கள் 47 ஆண்டுகளாக தவறாக நடந்து கொண்டு வருகின்றனர். என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button