பலதும் பத்தும்

’ஈ’ பிரியாணிக்கு 10 சிக்கன் பிரியாணி

ஒரு பிரபல உனவகமொன்றில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். குறித்த பிரியாணியில் ஒரு ஈ இறந்த நிலையில் இருந்ததனால் மன உளைச்சலுக்குள்ளான வாடிக்கையாளர் புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் முறைபாடு செய்துள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, பிரியாணி அன்ட் கோ என்ற உனவகத்தின் சேவை குறைபாட்டை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்

தலா 2 பிளேட் வீதம் தொடர்ந்து 5 வாரங்களுக்கு என மொத்தம் 10 பிளேட் பிரியாணியை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button