இலங்கை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் ஹர்ஷன செம்மணிக்கு வருகிறார்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிடுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணிக்கு விசேட வருகை மேற்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பிலான அனுமதி பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்று வரும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடவே நீதி அமைச்சர் இங்கு வருகைதரவுள்ளார்.

இதேவேளை அன்றையதினம் காணாமல் போனோர் பற்றிய அலுவலக ஆணையாளர்களும் இங்கு வருகைதர நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாக சட்டத்தரணி நிரைஞ்சன் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button