உலகம்

60 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததால் திரிணமுல் காங்கிரஸ் கூட்டம் ரத்து – மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சி!

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை 60 எம்.எல்.ஏக்கள் அதிரடியாகப் புறக்கணித்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பின்னர் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நாள்தோறும் பல்வேறு உட்கட்சிப் பூசல்களும் சிக்கல்களும் எழுந்து வரும் நிலையிலேயே இந்த அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து ஆராய்வதற்காக, மம்தா பானர்ஜியின் இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் திரிணமுல் சட்டசபைத் தலைவர் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 80 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், இக்கூட்டத்திற்கு வெறும் 20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர்.

60 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததால் மம்தா பானர்ஜி பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் வராததால் உத்தியோகபூர்வக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், அங்கு வந்திருந்த 20 எம்.எல்.ஏக்களுடன் மம்தா பானர்ஜி ஒரு முறைசாரா (Informal) ஆலோசனையை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button