மெல்போர்னில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கை தூதுக்குழுவினர் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தூதுக்குழுவினருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று மதியம் மெல்போர்னில் நடைபெற்றது.
மதிய உணவு விருந்துடன் கூடிய சந்திப்பில் கலந்துகொண்டு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான பங்களிப்பை வலுப்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவளித்தல், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைசார் உறவுகளை விரிவுபடுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமூகத்திற்கு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்காக, தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
![]()