இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச தலையீட்டைக் கோரி ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்  வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி தேவை இல்லை நீதியே தேவை, சர்வதேச தலையீடு தேவை எனவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தனர்.

பலர் கலந்து கொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல்போன தமது உறவினர்களுடைய படங்களை தாங்கி இருந்ததோடு ஓ எம் பி அலுவலகத்தினால் வழங்கப்பட்டுவதாக கூறப்படும் நிதி தேவை இல்லை எனவும் சர்வதேச ரீதியிலான விசாரணையும் தமது காணாமல் போன உறவினர்களுடைய முடிவுமே தமக்குத் தேவையான ஒன்று எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button