இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக வெசாக் தினத்திலும் பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் – வலி வடக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக வெசாக் தினமான கடந்த சனிக்கிழமையும் காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் விகாரையில் நடைபெற்ற நிலையில் , விகாரைக்கு அருகில் , காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.இதன்போது அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

தையிட்டி காணி உரிமையாளர்களை வீதியில் கூட செல்ல தடைவிதித்துவிட்டு பின் வீதியால் சிங்கள மக்களை விகாரைக்குள் உள்ளே எடுத்து வெசாக் கொண்டாட்டம் இடம்பெற்றதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை தையிட்டி விகாரையை புகைப்படங்கள் எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button