பஷிலுடன் இரகசியத் தொடர்பில் அரசாங்கத்தின் மேல் மட்டத்தினர்; நாட்டுக்கு வருவதை அவர்கள்தான் தடுக்கிறார்களா?

அரசாங்கத்தின் மேல் மட்டத்தில் இருப்போர் தன்னை விடவும் தனது சித்தப்பாவான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுடன் அடிக்கடி பேசுகின்றனர் என்றும், அவர்களின் ஆலோசனைகளுக்கமைய அவர் நாட்டுக்கு வராமல் இருக்கின்றாரா? என தெரியவில்லை என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது, வழக்கு விசாரணைகள் பலவற்றுடன் தொடர்புடைய பஸில் ராஜபக்ஷ நாட்டுக்கு வராமல் இருப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அவர் சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டில் இருக்கின்றார் என்று நம்பவில்லை. அவர் வெளிநாட்டில் இருக்கின்றார். அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விளக்கமளிப்புகளை முன்வைக்கின்றனர். எவ்வாறாயினும் என்னைவிடவும் நன்றாக இந்த அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் எனது சித்தப்பாவுடன் அடிக்கடி கதைக்கின்றனர். அவர்களின் ஆலோசனைக்கமைய வராமல் இருக்கின்றாரா என தெரியவில்லை என்றார்.
![]()