பலதும் பத்தும்

வரணித் தமிழ்ச்சங்கமும் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய சேக்கிழார் சுவாமிகள் விழா!

வரணித் தமிழ்ச்சங்கமும் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய அறநெறிப்பாடசாலையும் இணைந்து நடாத்திய சேக்கிழார் சுவாமிகள் விழா நேற்றையதினம் சிறப்புற நடைபெற்றது

வரணுயூர் சைவப்புலவரு வரணித் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான கா.கமலநாதன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை 2.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது.

சிட்டிவேரம் அம்பாள் ஆலய பூஜையை தொடர்ந்து சேக்கிழார் சுவாமிகள் மற்றும் 63 நாயன்மார் திருவுருவப் படங்கள் வரணியில் அமைந்துள்ள தென்மராட்சி கலாசார மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு எழுந்தருளச் செய்யப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் திருமுன்னிலை சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவசிறி இ.குமாரசுவாமிக்குருக்கள் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டார்

அத்துடன் கோபாய் ஆசிரிய கலாசாலை முதல்வர் செந்தமிழ் சொல்லருவி சந்திரமெளலீசன் லலீசன் மற்றும் வரணி மத்திய கல்லூரி அதிபர் திரு.இ,கோகுலராகவன் அவர்களும் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள்,நலன்விரும்பிகள் எனப்பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்,

இதில் கலைநிகழ்வுகள்,பிரசங்கள் மற்றும் வில்லிசை உள்ளிட்ட நிகழ்வுகளும் சிறப்புற இடம்பெற்றிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button