பலதும் பத்தும்
ஜனாதிபதி அனுர படித்த பாடசாலையை கட்டிய ரணில்

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க படித்த பாடசாலையை தானே கட்டியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதில் தனது பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
“நான் பதவியேற்றபோது 3,000 பாடசாலைகள் நாட்டில் இருந்தன, இன்று 11,000 பாடசாலைகள் உள்ளன. அப்போது ஒரே ஒரு பல்கலைக்கழகம் இருந்தது, இன்று 17 உள்ளன. ஜனாதிபதி அனுர படித்த பாடசாலையையும் நானே கட்டினேன்.” என தெரிவித்துள்ளார்.
![]()