இலங்கை

2009 இறுதி யுத்தம் தொடர்பில் கொழும்பில் ஆபத்தான முடிவு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மே18 நினைவேந்தல் நாளிலே, இறுதி யுத்தத்தின் போது இன அழிப்பு அல்லது இனப்படுகொலை இடம்பெற்றது என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்துக்களை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையும் இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கத்தோலிக்க தேசிய ஊடகத்தினுடைய இயக்குநர் குறிப்பிட்டார்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இனுடைய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அது ஒட்டுமொத்த கத்தோலிக்க திருச்சபையினுடைய கருத்தாக பார்க்கப்படாது என்று கூறியிருந்தார்.

மேலும் 2009ஆம் ஆண்டு மேமாதம் 10ஆம் வத்திக்கானிற்கு முள்ளிவாய்க்காலிருந்து ஒரு கடிதம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button