இலங்கை

2029 இலும் அநுரவே ஜனாதிபதியாவார்; அமைச்சர் சுனில் கமகே தெரிவிப்பு 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2029 ஆம் ஆண்டு மீண்டும் தெரிவு செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தியுள்ளதுடன், பொதுமக்களின் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், தவறான முடிவுகளால் இலங்கை இதற்கு முன்னர் “திசையற்றதாக” மாறியிருந்ததாகவும், ஆனால் தற்போதைய நிர்வாகம் அந்த நிலையை மாற்றியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஆதரவு, நாடு தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தைப் பதிவு செய்ய பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button