இலங்கை

நாங்களே இன்று உண்மையான எதிர்க் கட்சி!

நாட்டின் உண்மையான எதிர்க்கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே செயற்படுகின்றது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டு மக்களின் எதிர்க்கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவாகிவிட்டது. பாராளுமன்றத்தில் எங்களுக்கு புதிதாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இங்கு எதிர்க்கட்சித் தலைவர் யார்? அரசாங்கத்தின் தவறுகளுக்கு எதிராக பயமின்றி பேசுவது யார்? அரசாங்கத்தின் மோசடிகளை வெளிப்படுத்துவது யார்? என்பதனை மக்கள் அறிவார்கள். இதன்படி மக்களின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை அறிவார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் இதற்கான பதிலை வழங்குவார்கள் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button