கவிதைகள்

ஓட்டையிருந்தும் உயிர் போகாதது வியப்பு!… கவிதை… அன்பு ஜெயா

பா வகை: ஏலப் பாட்டு என்ற சிந்து பாடல்.

ஓட்டையுள்ள குடத்தினிலே ஒன்றுமுள்ளே தங்கி
நாட்பட்டு நில்லாதே நாடறிந்த உண்மை;

ஓட்டையுமே உன்னுடலில் ஒன்பதுதான் உண்டே
நாட்பட்டே உயிரதுவும் நலம்பெறுதல் பெருமை;

கூட்டினிலே வாழ்கின்றக் குருவியதும் நாளும்
நாட்டினிலே திரிந்துகூட்டை நாடிடுதல் அருமை;

கூட்டினிலே அடைந்தவுயிர் கூட்டினையே பிரிந்தால்
மீட்டதனை உன்னுடலில் மீளவைத்தல் சேய்மை;

கூட்டினிலே உள்ளபோதே குற்றங்கள் நீக்கி
ஆட்டமிடும் உயிரினுக்கே அமைதியளி பெருமை!

ஏலேலோ! ஐலசா ஏலேல ஏலேலலோ!

அன்பு ஜெயா, சிட்னி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button