இலங்கை

கர்மா ஒருபோதும் அநுர அரசை சும்மா விடாது

மக்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறும் ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்க ஏன் எமது காணிகளை இன்னமும் விடவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மயிலிட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இடம்பெறும் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினார்கள்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த கர்மவினை அவர்களின் அரசாங்கத்தை இல்லாமல் செய்தது.

அதேபோல் அனுர அரசாங்கமும் மக்களை துன்பப்படும் வகையில் மேற்கொள்ளும் எந்த ஒரு கர்ம வினையும் அவர்களின் அரசாங்கத்தையும் நிலைகுலைய வைக்கும்.

நாங்கள் அரசாங்கத்திடம், வாழ்வதற்கு பணம் கேட்கவில்லை. எமது சொந்தக் காணிகளை இராணுவத்தின் பிடிக்குள் இருந்து மீட்டுத்தருமாறே கோருகிறோம்.

ஆகவே மஹிந்த அரசாங்கத்துக்கு நடந்த கர்ம வினையை நினைவில் கொண்டு, மக்களின் காணிகள் மக்களுக்கே என வாக்குறுதி வழங்கியபடி எமது காணிகளை விரைவாக விடுவித்துத் தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button