இலங்கை
சுமந்திரனை அழைத்த அநுர!; என்பிபி கட்சிக்குள் கடும் குழப்பம்..

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு நூலகம் தொடர்பிலும் அங்கு நடந்த விடயங்கள் தொடர்பிலும் பல வாத பிரதி வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னர் ஒருமுறை யாழ் மாவட்டத்தில் நடந்த ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டத்தில் அமரர் சம்பந்தன் கைகளில் சிங்ககொடி ஏந்தப்பட்டிருந்தது. இதன் மூலம் சர்வதேசத்திற்கு பல விடயங்கள் கூறப்பட்டன.
அதனை தொடரந்து 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
இநத விடயங்கள் நடந்துள்ளநிலையில், மட்டக்களப்பு நூலகத்தை திறந்து வைக்க வந்த ஜனாதிபதி அநுரகுமார மற்றயவர்களை விட சுமந்திரனுக்கு முன்னுரிமை கொடுத்தமையானது மிகவும் பேசுபொருளாகியுள்ளது.
இதனை என்பிபி முக்கியஸ்தர் ஒருவரே விமர்சனத்திற்குட்படுத்தியுள்ளார்.
![]()