இலங்கை

பிரகீத் எக்னெலிகொட கொலை வழக்கு!விரைவில் வெளிவர உள்ள ஆதாரங்கள்

2010 ஆம் ஆண்டு கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தற்போது கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையிலே,  சந்தியா எக்னெலிகொட கோட்டாபய ராஜபக்சவின் குழுவினர் தான் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்துள்ளதாகவும் அதற்கான எல்லா விதமான ஆதாரங்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பில் கிரித்தலே இராணுவ ஆயுதப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் உட்பட ஒன்பது பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த வழக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

அத்தோடு, அன்றையதினம் பிரகீத் எக்னெலிகொடவின் அலுவலகத்திற்கு முன்னாள் வெள்ளை வான் ஒன்று வந்து நின்றதாகவும் அதன் பின்னர் அவருக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள் வந்து அவர் அலுவலகத்தை விட்டு வெளியேறி சென்றதாகவும் அவரது பணியாளர் சத்தருவன் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொடவை யார் கொலை செய்தது, எதற்காக கொலை செய்தது என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button