இலங்கை

ரணிலை சந்தித்த அரசதரப்பின் முக்கியப்புள்ளி..! சூடு பிடிக்கும் தென்னிலங்கை

இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாயின் மிகவேகமான பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றினால் பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு நகர்வதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சர்வ கட்சி மாநாடு ஒன்றைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு மீண்டும் ஒருமுறை கடுமையான மற்றும் ஆபத்தான பொருளாதார எச்சரிக்கை நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் ஒன்றிணைந்துள்ளதாக பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இலங்கையின் வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதுடன், நம்பிக்கை நலிவடைந்துள்ளமை காரணமாக சந்தையில் பெரும் ஸ்திரமற்றதன்மை மற்றும் நிச்சயமற்ற ஒரு “நச்சுச் சுழற்சி” உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.

இது இவ்வாறிருக்கையில், அரசதரப்பிலுள்ள மிக முக்கியமான நபரொருவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button