இலங்கை

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு சபையில் அஞ்சலி

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்ததளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் சபையில் அஞ்சலி செலுத்தினார்

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற அமர்வின்போது நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறுஅஞ்சலி செலுத்திய அவர் மேலும் பேசுகையில்,

எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் எமை விட்டுப் பிரிந்து இன்று 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர்.

உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜு க்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button