இலங்கை

ராஜபக்‌ச காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களுடன் இலங்கை வரப்போகும் அசாத் மௌலானா..!

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது சூடுப்பிடித்துள்ளன.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நீதிமன்றில், முன்வைத்துள்ள கருத்துக்கள் பெரும் அதிர்வலைகைளை ஏற்படுத்தியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக் கைதியாக இருந்த பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதற்கு நாமல்ராஜபக்ச இதற்காகவா அங்கு சென்றார்கள், மக்கள் பணம் வீண் விரயம் ஆவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஊடகசந்திப்பொன்றில் ஜேவிபி, என்பிபி தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் வாக்குமூலம் வழங்கிய, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு தனக்கு சுரேஷ் சலேவால் ஒரு ஹோட்டலில் விருந்துபசாரம் நடத்தப்பட்டது என்றும் அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தார்.

இதுவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அசாத்மௌலாவின் வாக்கு மூலங்களை எப்படி நம்புவது, குறுக்கு விசாரணை செய்ய முடியாது, செனல் 4 ஊடகத்தை எவ்வாறு நம்புவது என்ற கேள்வியெழுந்த நிலையில், தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் நான் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பிலும் வேறு பல விடயங்கள் தொடர்பிலும் முக்கிய சாட்சிகளை கூற தாயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button