இலங்கை

இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை!

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு இன்று (22) முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி, விமல் வீரவன்ச மற்றும் ஒரு குழுவினர் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button