பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த கண்டன போராட்டம் வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே இடம்பெறுள்ளது.
போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் உணவகங்கள், சிறு தொழில்கள் மூட காரணமான வணிக சிலிண்டர் விலை உயர்வையும் கைவிட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அத்தியாவசியமான பொருட்கள் அனைத்து மக்களுக்கும் குறைவான விலையிலும், தட்டுப்பாடு இன்றியும் கிடைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி, விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
![]()