அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள போதிலும், ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு உடன்படாவிட்டாலும், அந்நாட்டின் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்தும் அமெரிக்காவின் முந்தைய எச்சரிக்கையிலிருந்து தற்போது வாஷிங்டன் பின்வாங்கியுள்ளது.
இருப்பினும் , இஸ்ரேலின் அரசியல் வட்டாரமோ எப்படியாவது போரைத் தூண்டுவதற்குக் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஈரானுடன் மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் ஆர்வமாக இருந்தபோதிலும், அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் அவர்களால் அதைச் செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையும் நீடிக்கிறது.
ஆனால், அதற்கான அனுமதி அமெரிக்காவிடம் இருந்து விரைவில் கிடைக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலின் கவலைகளைப் பொருட்படுத்தாமல், ஈரானுடன் தற்காலிகப் போர்நிறுத்தத்தை (Truce) எட்ட வாஷிங்டன் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே நேற்று இரவு தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த உரையாடலின் போது ட்ரம்பின் நிலைப்பாட்டைக் கேட்டு, நெதன்யாகு கடும் கோபமடைந்ததாக (Hair on fire) செய்திகள் வெளியாகியுள்ளன.
![]()