உலகம்

கியூபாவின் முன்னாள் தலைவர் மீது அமெரிக்கா கொலைமுயற்சி குற்றச்சாட்டு!

1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது கொல்ல சதி உள்ளிட்ட பல புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.

‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ (Brothers to the Rescue) என்ற கியூபா மற்றும் அமெரிக்க அமைப்பின் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில், மூன்று அமெரிக்கர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் விமானங்களை அழிக்க முயற்சித்ததாகவும் அமெரிக்கக் குடிமக்களை கொலை செய்ய திட்டமீட்டியதாகவும் கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்க குற்றம் சுமத்தியுள்ளது.

94 வயதான காஸ்ட்ரோ, அந்த காலப்பகுதியில் கியூபாவின் ஆயுதப்படைகளின் தலைவராக பதவி வகித்துள்ளார்

இந்த தாக்குதல் சம்பவம் அப்போது சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படாலம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button