பலதும் பத்தும்

விமானத்தில் இருந்து கழன்று விழுந்த இன்ஜின்

அமெரிக்காவின் லூயிஸ்வில்லி UPS விமான விபத்து தொடர்பான வீடியோ ஆதாரங்களை NTSB வெளியிட்டுள்ளது.

வெளியான விமான விபத்து வீடியோ

கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள லூயிஸ்வில்லை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட UPS பிளைட் 2976 சரக்கு விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

 

லூயிஸ்வில்லி முஹம்மது அலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஹொனலுலு நோக்கி பறக்க தொடங்கிய சில நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்(NTSB) UPS பிளைட் 2976  விமானம் விபத்துக்குள்ளானது காட்சியை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், விமானத்தின் இடது பக்க என்ஜின் கழன்று விழுவதும், விமானத்தின் கட்டமைப்பு தோல்வியால் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த விபத்து சர்வதேச விமான போக்குவரத்து துறையை அதிரச் செய்துள்ளது.  அதே சமயம் நடைபெற்று வரும் விசாரணையில் இது விமானியின் தவறு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து கழன்று விழுந்த இன்ஜின்: சிசிடிவி வீடியோவை வெளியிட்ட NTSB | Ntsb Released Ups Md 11 Cargo Crash Cctv Video

முறையான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பான இறுதி அறிக்கை 2027 ம் ஆண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானம் 34 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button