கருப்பு கோட் சூட்டில் நெற்றியில் கருப்பு பொட்டு! விஜய்யின் Dresscode Secret தெரியுமா?

தமிழக முதலமைச்சராக விஜய் கருப்பு கோட்- சூட், நெற்றியில் கருப்பு பொட்டிற்கான பின்னால் ரகசியம் பற்றி பதிவில் பார்க்கலாம்.

முதலமைச்சர் விஜய்
இவர் நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக மாறி உள்ளார். இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சி தனிக்ட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் விஜய் முதலமைச்சராக மாறி உள்ளார். விஜய் பதவியேற்க வந்ததில் இருந்து தற்போது சட்டசபைக்கு வருவது முதல் அவருடைய கருப்பு கோட் சூட் மற்றும் அவர் நெற்றியில் வைத்துள்ள கருப்பு பொட்டு பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருப்பு கோட்- சூட், கருப்பு பொட்டு
இந்த நிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து தனது நெற்றியில் கருப்பு பொட்டு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பொட்டு அரகஜா திலகம் எனப்படுகின்றது.
அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் இந்த பொட்டை அதிகமாக வைப்பார்கள்.
இந்த அரகஜா திலகம் ஜவ்வாது,பச்சை கற்பூரம், புனுகு, வெட்டிவேர் ஆகிய மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டது.
இந்த அரகஜா திலகத்தை ஆன்மிகம் மற்றும் ஜாதகத்தை அதிகளவு நம்புபவர்கள் இந்த பொட்டை பயன்படுத்துகிறார்கள். இதை வைத்தால் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள், வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

இதை தொடர்ந்து விஜய் அணிந்துள்ள கோட் சூட் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கருப்பு நிறம் என்பது அதிகாரம், ஆளுமை, தன்னம்பிக்கை, தனித்துவத்தை குறிப்பதாகவும் இதன் அடையாளமாகவே விஜய் கருப்பு கோட் சூட் அணிவதாகவும் தகவல் வெளியானது.

விஜய்யின் இந்த கருப்பு கோட் சூட்டை பிரபல ஆடை வடிவமைப்பளரான சபீர் அகமது வடிவமைத்துள்ளாராம். இந்த ஒரு கோட் சூட்டின் விலைரூ.40,000 முதல் ரூ.70,000 எனப்படுகின்றது.
அந்த வகையில் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய்யும் தனது நெற்றியில் அரகஜா திலகத்தை வைத்து ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் கோட் சூட்டும் அணிந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
![]()