பலதும் பத்தும்

நோய் வரும் முன்பே காக்கும் மூளை – புதிய ஆய்வு

நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரை நாம் பார்க்கும்போது நமது மூளையானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலை தயார்படுத்துகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இது உண்மைதானா என்பதை கண்டறிந்துகொள்ள சுவிட்சர்லாந்து மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்காக ஒரு சிலரிடம் சிறப்புக் கண்ணாடியொன்று வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கணினியினால் உருவாக்கப்பட்ட ஒரு உருவத்தை அவர்களால் காண முடிந்தது.

இந்த உருவங்கள் குறித்த நபர்களை நெருங்கும்போது அவர்களது மூளையின் சில பகுதிகள் செயல்பட ஆரம்பித்துள்ளன.

பின்னர் மூளையின் ‘செலியன்ஸ் நெட்வர்க்’ எனும் பகுதி செயல்பட்டுள்ளது.

இந்த செல்களானது நோயெதிர்ப்பு சக்தியை எதிர்கொள்ள பாதுகாப்பு அணியாக செயல்படுகிறது.

ஆரோக்கியமான உருவங்களைப் பார்த்தவர்களைக் காட்டிலும் நோய் அறிகுறிகளைக் காட்டும் உருவங்களைப் பார்த்தவர்களின் மூளையின் செயல்பாடு அதிகமாக இருந்தது.

இந்த ஆய்வானது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் சுகவீனங்களை எதிர்கொள்ள மூளை எவ்வாறு தயாராகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button