பலதும் பத்தும்

டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன், அமெரிக்காவின் “51 வது மாநிலமாக” சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் ட்ரம்ப் இந்த வரைபடத்தைப் பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய கருத்து தற்போது உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், தனது நாடு அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாறுவது குறித்து “எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரிசீலிக்கவில்லை” என்று கூறி ஒரு நாளுக்குப் பிறகு ட்ரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை Fox News ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்திருந்த ட்ரம்ப், எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவை அமெரிக்காவின் புதிய மாநிலமாக மாற்றுவது குறித்து “பரிசீலித்து வருவதாக” கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த யோசனையை நிராகரித்த டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலா மக்களின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button