இலங்கை

இந்திய – இலங்கை மீனவர்கள் விடயத்தில் அரசாங்கம் அறிக்கைகளை மட்டும் விடக்கூடாது – டக்ளஸ் தெரிவிப்பு

இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது அன்று தொடக்கம் கூறப்பட்டு வருகின்ற விடயமே. அரசாங்கமானது அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு இருக்காமல் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடத் தொழில் அமைச்சராக இருந்தபோது இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு முயற்சித்தேன்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர் அயலக உறவுகள் என்றொரு தினத்தினை தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் போது இலங்கையிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்தார்.

இதன்போது கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகர உட்பட பல தமிழ் எம்.பிகள் தமிழ்நாட்டுக்கு சென்றார்கள்.

அங்கு சென்று அவர்கள் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுப்பதற்கு முண்டியடித்தார்கள்.

மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எந்த விதமான அக்கறையும் காட்டவில்லை. நான் சென்றிருந்தால் அது குறித்து பேசி இருப்பேன்.

அனுர அரசாங்த்தை பொறுத்தவரையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவிக்கிறார்கள். ஆனால் அவற்றை செயல்படுத்தவில்லை.

வடக்கு கிழக்கில் அனுரவின் கட்சிக்கு எட்டு எம்.பிகள் உள்ளார்கள். அவர்களே அதனை செயல்படுத்துவதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

அதைவிட தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை குழு ஆகியன வடக்கு கிழக்கை மையப்படுத்தி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். நான் அவருக்கு ஏதும் சொல்ல விரும்பவில்லை.

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை அறிவித்துள்ளது இது இன்று நேற்றல்ல அன்று தொடக்கம் கூறப்பட்டு வருகின்ற விடயமே.

அந்த தீர்ப்பினை அந்த நாட்டு மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அது மட்டும் இலலாமல் இலங்கை அரசாங்கம் அந்த தீர்ப்பினை தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளை செய்யாமல், அரசாங்கமானது இங்கிருந்து வெறுமனே அறிக்கைகளை விடுவதால் எந்தவித பிரயோசனமும் இல்லை கடல் தொழில் செய்தவனுக்கு அறிக்கை எதுவும் செய்யப் போவதில்லை. நடைமுறையில் அவற்றை செயற்படுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *