முதலமைச்சர் விஜய்க்கு இன்று பலப் பரீட்சை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று . காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் இன்று புதன்கிழமை சட்டமன்றத்தில் விஜய் தலைமையிலான அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறுவவுள்ளது
தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் மட்டுமில்லாமல் பெரும்பான்மையை நிருபிப்பதில் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதால் இதன் மூலம் தமிழக வெற்றிக் கழக கூட்டணியின் பலம் 150வரை உயரும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
இன்று சட்டமன்றம் கூடிய உடன் தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்த தீர்மானத்தை ஆளும் கட்சியில் இருந்து ஒருவர் முன்மொழிய அதன் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றுவார். அப்போது அனைவரது நம்பிக்கையையும் கோரும், வகையில் அவரது பேச்சு இருக்கும். இந்த தீர்மானத்தின் மீது மற்ற கட்சியினரும் உரையாற்றுவார்கள். இது முடிந்த உடன் அந்த தீர்மானம் மீது எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பு நடக்கும்.
118க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்துவிட்டால் விஜய் ஆட்சி தொடரும் இல்லை என்றால் ஆளுநருக்கு தகவல் அளிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்படும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு. தற்போது ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டார், திருப்பத்தூர் உறுப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்துவிட்டது, விஜய் ஒரு பதவியை இராஜிநாமா செய்துவிட்டார் என்பதால் அவையில் தவெக பலம்105ஆக மாறிவிட்டது.
காங்கிரஸ் 5 பேர், 2 இடதுசாரி கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் தலா 2 பேர் என 13 பேர் ஏற்கனவே ஆதரவு தந்துள்ளதால் சரியாக 118 பேரின் வாக்கு கிடைக்கும். அதிமுக உறுப்பினர்களில் சிலரும் தவெகவுக்கு ஆதரவு தருவார்கள் என்பதால் விஜய் ஆட்சிக்கு சிக்கல் இருக்காது என்றே கருதப்படுகின்றது.
![]()