பலதும் பத்தும்

ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்!

`புரோஸ்டேட்’ என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் வால்நட் அளவில் இருந்து வயதை பொறுத்து காணப்படும்.

பொதுவாக உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்பு கொள்பவையாகும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது, சிறுநீர் தானாக வெளியேறுதல் போன்ற பிரச்னைகளில் தொடங்கி முதுகு வலி, எலும்பு முறிவு, எலும்புகளில் வலி போன்ற பிரச்னைகள் தென்படும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு 30% அதிகரித்துள்ளது என்று `லான்செட்’ வைத்திய ஆய்வறிக்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு புரோஸ்டேட் புற்றுநோயால் உலகளவில் பதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 3,75,000 ஆண்கள் இந்த புற்றுநோயால் இறந்துள்ளனர். இந்தியாவில் லான்செட் அறிக்கையின்படி, கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் புரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2040 ஆண்டில் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் 85% புற்றுநோயால் இறக்கப்படுவார்கள் எனவும் இதுவரை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 33,000 முதல் 42,000 பேர் புதிதாக புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என வைத்தியர்கள் கணிப்பில் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button