இலங்கை

விஜய் முதல்வராகிவிட்டார் இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும் தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவிப்பு

அனைவரையும் ஆச்சரியப்படவைக் கூடிய வகையில் தமிழ் நாட்டில் தளபதி விஜய் முதல்வராகிவிட்டார். இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜய் அவர்களின் வெற்றி குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வருடாந்தம் ஆயிரம் கோடி வருமானத்தை நேர்மையாக உழைக்க கூடியதாகவிருந்தும் அதை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தார். இது மிகப்பெரிய தியாகம். இவரது ஆட்சியில் தமிழகம் மெருகூட்டப்படும் என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கையுண்டு.

தமிழகம் இந்தியாவில் சிறப்பான மாநிலம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குற்றச் செயல்கள் குறைவு. கல்வியறிவுடன் கூடிய மக்கள் அதிகம் வாழும் மாநிலம். அப்துல்கலாம், ஜெசங்கர், நிர்மலா உட்பட பல அறிவாளிகளை தந்த மாநிலம். இந்த மாநிலத்தை ஆண்ட கடந்த கால முதல்வர்களையோ, கட்சிகளையோ குறைவாக மதிப்பிட முடியாது. இவர்களின் திறமையான ஆட்சி தான் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.

1980களில் கருனாநிதி கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். ஏராளமான பொறியியல் மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார். பல நலத்திட்டங்களை செயற்படுத்தினார். அவ்வாறே ஏழைகளின் தோழனான எம்.ஜி.ஆர் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பான திட்டங்களை ஆரம்பித்தார். ஜெயலலிதாவும் தமிழ் நாட்டிற்கு பல நன்மைககளை வழங்கி ஆட்சி புரிந்தார்.இவர்களின் ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்று சென்னை மத்திய புகையிர நிலையத்தில் வட நாடுகளில் இருந்து நாளாந்தம் 50000 பேர் வேலை தேடி வந்திறங்குகின்றார்கள். வட மாநிலங்களில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனங்கள் தமிழர்களையே கணக்காளர்களாக வைத்திருக்க விரும்புகின்றனர்.

உலகம் முழுவதும் தமிழ் நாட்டு தமிழர்கள் பல நிபுணத்துவ தொழில்களை செய்கின்றனர். இவ்வாறான விடயங்களில் இருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சியை புரிந்து கொள்ளலாம். புதிய முதலமைச்சர் விஜயிற்கு தமிழ் நாட்டிற்கு உரமூட்டுவதே வேலையாக இருக்கும். கடந்த முதல்வர்களை குறைசொல்வதை தவிற்பது அவரின் ஆளுமையை மெருகூட்டும். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு மக்களுடன் நீண்ட உறவை கொண்ட தமிழர் விடுதலைக்கூட்டணி புதிய முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button