இந்தியா

தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம் – டி.கே.எஸ். இளங்கோவன்

தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம் என்று தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய்சந்தித்து உரிமை கோரினார்.

அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை (07) காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்த பிறகு, ஆளுநர் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. மேலும், ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் கட்டாயம் என்பதை ஆளுநர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய, திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “தவெக முதலில் 107 இடங்களுடன் ஆளுநரை அணுகியிருந்தால், ​​ஆளுநர் அவர்களை அழைத்திருப்பார். ஆனால், தவெக தங்களோடு வேறு ஒரு கட்சியைச் சேர்த்துக்கொண்டதால் இடங்களின் எண்ணிக்கை 112 ஆகின்றது. ​​அதனால், அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் நிச்சயமாகச் சொல்வார்.

தவெக மட்டும் சென்றிருந்தால், தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்து, பின்னர் சட்டபேரவையில் தங்கள் பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் அவர்களை அழைத்திருப்பார். இப்போது தவெகவுக்கு சில கட்சிகளின் ஆதரவு கிடைத்திருப்பதால், அரசாங்கம் தனிப்பெரும்பான்மைக்காகக் காத்திருக்கும்” எனத் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button