முச்சந்தி

எங்கள் காணிகளுக்குள் வாழத்தான் விடவில்லை கடைசி நேரத்தில் எம்மை சாகவாவது விடுங்கள்; வலி வடக்கில் மக்கள் போராட்டம் 

எங்களை எங்களுடைய காணிக்குள் வாழத்தான் விடுகிறீர்கள் இல்லை. எங்களை கடைசி நேரத்தில் சாகவாவது விடுங்கள் என வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் தங்களது பூர்வீகக் காணிகளை தங்களிடம் வழங்குமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

36 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து மக்கள் நிற்கதியாக நிற்கும் நிலையில், தரைமட்டமாக்கப்பட்ட மயிலிட்டி காணிக்கு முன்பாகவும் அதாவது இராணுவ பங்களா அமைந்துள்ள பகுதியில் மாதா ஆலயம் முன்பாக காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் வெள்ளிக்கிழமை அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணி எமக்கு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் பல வடிவங்களில் நடைபெறும் என்றும் தெரிவித்ததோடு இந்த அரசாங்கம் எங்களுக்கான வாழ்வுரிமையை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button