பலதும் பத்தும்

எச்சரிக்கை பதிவு! மக்களின் கவனத்திற்கு!

சுகாதார மற்றும் மருத்துவத் தகவல்களுக்காக செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை பயன்படுத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவை தவறான அல்லது திசைதிருப்பும் பதில்களை வழங்கும் போக்கைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், ChatGPT மற்றும் Grok உள்ளிட்ட மென்பொருட்களின் உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அவை 50 மருத்துவக் கேள்விகளுக்கு அளித்த பதில்களில் பாதி “சிக்கலானவை” எனக் கண்டறியப்பட்டது.

Grok உரையாடல் மென்பொருட்களில் 58 சதவீத பதில்கள் சிக்கலானவையாக இருந்தன, இதுவே அதிகபட்சப் பிரச்சினைகளாக வெளிப்பட்டது. இதைத் தொடர்ந்து ChatGPT 52 சதவீதமும், Meta AI 50 சதவீதமும் சிக்கலான பதில்களை அளித்தன.

இதனைத் தொடர்ந்தே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை நாடுமாறு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button