“புரொஜெக்ட் ஃப்ரீடம்” இராணுவ நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்

ஈரானுடன் உத்தேசிக்கப்பட்டுள்ள உடன்படிக்கை ஒன்றுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்ட “புரொஜெக்ட் ஃப்ரீடம்” (Project Freedom) நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
இருப்பினும், ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முற்றுகைகள் மற்றும் தடைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவொன்றை இட்டுள்ளார். பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ள உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“உடன்படிக்கையை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக, குறுகிய காலத்திற்கு இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
![]()