முச்சந்தி

நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்; உயிர் பிழைக்க தப்பியோடிய இளைஞன்! யாழில் பயங்கரம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நேற்று நள்ளிரவு வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை இலக்காகக் கொண்டு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலின் போது வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், உயிர் தப்பிக்க அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலாளர்கள் “மகனை அழைத்து வருமாறு” மிரட்டியபடி வீட்டின் உபகரணங்களை சேதப்படுத்தியதுடன், அருகில் உள்ள மற்றொரு வீட்டின் உடமைகளையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ள மருதங்கேணி பொலிஸார், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button