முச்சந்தி

‘நாம் ​நீலகாமம்’ போராட்டத்துக்கு குவியும் ஆதரவு: எதிர்க்கட்சித் தலைவரிடம் மகஜர் கையளிக்க முடிவு

இரத்தினபுரி – காவத்தை நீலகாமம் தோட்டத்தில் நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மலையக சிவில் சமூக அமைப்புக்களால் இன்று திங்கட்கிழமை (4) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மகஜரொன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய்க்கிழமை (5) கொழும்பு – ஐந்துலாம்பு சந்தியில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெறவுள்ளதோடு, ஜனாதிபதி செயலகத்திலும் மகஜரொன்றை கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை (5) நடைபெறவுள்ள ‘நாம் நீலகாமம்’ அறவழிப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் நாளை நடத்தப்படவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button