நிகழ்வுகள்

16 ஆவது ஆண்டில் அக்கினிக்குஞ்சு; யாழ் ராகவன் வாழ்த்துச் செய்தி

அகவை 15 அடி எடுத்து வைக்கக்கூடி அக்கினி குஞ்சு என்ற அரசியல் சமூக இலக்கிய இதழ் நூற்றாண்டு தாண்டியும் பட்டு ஒளி வீசி பறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழத் தமிழர்கள் தங்கள் தமிழ் மீது உள்ள அளவற்ற காதலை அன்பை மரியாதையை இதழ்கள் நடத்துவது மூலம் சர்வதேச அளவில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில் அன்பு தோழர் பாஸ்கர் அவர்கள் பல்வேறு பணி சுமைகளுக்கு மத்தியில் பல்வேறு கடின உழைப்பின் இடையே இப்படி ஒரு இதழை 15 ஆண்டு காலம் நடத்துவது சாதாரண விடயம் அல்ல.

எண்ணற்ற படைப்பாளிகளை அளவில்லாத வாசகர்களை இணைக்கும் ஒரு பாலமாக அக்கினி குஞ்சு இதழ் பட்டொளி வீசி பறக்கிறது.

வண்ண வண்ண ஓவியம் ஆகட்டும் எண்ணங்களை கருத்து தோரணமாக்கும் எழுத்துக்களாகட்டும் வியப்பின் உச்சியில் அனைவரையும் மிதக்க விடுகிற மக உன்னதமான பணியை அவர் செய்து கொண்டிருக்கிறார்

எனது சிறுகதைகள் கவிதைகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களும் படிக்கப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டு எனக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்று தந்தது அக்னி குஞ்சு இதழ் எனக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் படைப்பின் வழியே பயணிக்க வைக்கும் அற்புதமான ஒரு ஊடகமாக திகழ்கிறது.

வடிவமைப்பாட்டும் ஓவியம் ஆகட்டும் இந்த இதழுக்கு நிகர் இந்த இதழிலேஎன்று சொல்லும் அளவிற்கு அற்புதமான வேலைப்பாடு தேவையான கருத்துக்கள் நிரம்ப நிறைந்துள்ள இதழாக மனதுக்கு இடம் தரும் இதழாக அக்கினிக் குஞ்சு வளம் வந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு ஆளுமைகளை பயன்படுத்தி அவர்களின் கருத்தோட்டங்களை என்ன குளியல்களை உணர்வு தோரணமாய் உற்சாக எழில் வனமாய் மாற்றும் வல்லமை பத்திரிக்கை கொண்டு அந்தப் பணியை சிரம் மேற்கொண்டு செய்து கொண்டிருக்கிற அத்தனை ஊழியர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும்.

இன்னும் இன்னும் பல்வேறு சாதனைகளை சிறப்பாக செய்து முடிக்க நிறைய வாசகர்களை நிறைய படைப்பாளிகளை ஒரு கருவாக்கி உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும் இந்த இதழ் இதில் பணியாற்றிக் கூடிய அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டு ம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button