பலதும் பத்தும்

பூனையை அடித்த சிறுவனுக்கு தாய் புகட்டிய பாடம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

வளர்ப்பு பூனையை அடித்த மகனுக்கு தாய் கொடுத்த தண்டனை இணையத்தில் காணொளியாக வெளியாகியுள்ளது.

சிறுவன் ஒருவன் தான் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்றினை அடித்துள்ளார். இதனால் கோபமாகிய தாய் தனது மகனுக்கு தண்டனை கொடுப்பதற்கு முடிவு எடுத்துள்ளார்.

இதனால் சிறுவன் ஆசையாக வைத்து விளையாடிய ப்ளே ஸ்டேஷனை சுக்குநூறாக உடையும் வரை தண்டனை கொடுத்துள்ளார்.

சிறுவனும் தாயின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தான் வைத்திருந்த ப்ளே ஸ்டேஷனை அதிகமான முறை கீழே போட்டு உடைத்துள்ளார்.

சிறுவனின் செயலுக்கு தாய் கொடுத்த தண்டனையை பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் வன்முறைக்கு இன்னொரு வன்முறை எப்படி தீர்வாகும் என்று கொந்தளித்துள்ளனர்.

இவை மேலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஒரு பொருளை உடைக்கக்கூறுவதற்கு பதிலாக மனநல ஆலோசனை அளிக்கலாம் என்று கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button