பலதும் பத்தும்

மீனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மீனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மீன்

மீனில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மனிதர்களின் இதயம், மூளை, சருமத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது.

அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் மீனை விதவிதமாக சமைத்து சாப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி பொரித்தும் சாப்பிடுகின்றனர்.

சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் இதில் உள்ள பாதரசம் மற்றும் ஒவ்வாமைப் பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது.

பக்கவிளைவுகள் இல்லாத அசைவ உணவாக இருந்தாலும், எந்தெந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் மீன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

யாரெல்லாம் மீன் சாப்பிடக்கூடாது?

கர்ப்ப காலத்தில் பாதரசத்தின் வெளிப்பாடு குழந்தையின் மூளை வளர்ச்சியினை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் சுறா, வாளமீன் மற்றும் கிங் மேக்கரல் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

பாலூட்டும் போது தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சென்று நரம்புமண்டலத்தை பாதிக்கின்றது.

கர்ப்பிணிகள் சால்மன், இறால் மற்றும் சூரை மீன் இவற்றில் குறைந்த பாதரச உள்ளடக்கம் இருப்பதால் இவற்றினை சாப்பிடலாம்.

மீனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? உஷார் மக்களே | People Who Have This Problem Should Not Eat Fish

 

அதே போன்று 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதரச தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களின் சிந்தனையும், இயக்கமும் பாதிக்கக்கூடும். ஆகவே இவர்கள் மத்தி மீன்களை சாப்பிடுவது சிறந்தது.

ஒவ்வாமை பிரச்சனையான தடிப்பு, வீக்கம் உள்ளவர்கள் மீனை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒமேகா 3ஐ பெறுவதற்கு ஆளிவிதை, சியா விதை மற்றும் வால்நட்ஸ் இவற்றினை சாப்பிடலாம்.

மீனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? உஷார் மக்களே | People Who Have This Problem Should Not Eat Fish

 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, பச்சையாகவோ அல்லது சரியாக வேகவைக்கப்படாத மீன்களாலோ நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மீனைச் சாப்பிடுவதற்கு முன்பு எப்போதும் நன்கு வேகவைக்க வேண்டும்.

சில மருந்துகளை, குறிப்பாக இரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் , மீன் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், மீனில் உள்ள அதிக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே சாப்பிடும் முன் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.  

மீனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? உஷார் மக்களே | People Who Have This Problem Should Not Eat Fish

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *