கவிதைகள்
பார் ஆளும் கவியே… கவிதை… சி.ரஞ்சிதா

கவிகளுக்கு எல்லாம் ஒளியாய்
தமிழ் உலகின் உயிராய்
பாரதம் போற்றும் ஆளாய்
காலனியம் அழித்த அம்பாய்
அடிமையை அறுத்த வாளாய்
சமநீதி முழக்கிய முரசாய்
பிறப்பே பிறருக்கு என
வாழ்ந்த மகா கவியே!
கலைஞனின் அழகோ
உயிர் நீப்பினும் நீங்கிடா
கலைகளில் வாழ்வது…!
நீ வாழும் கலைஞன்…!
பார் பாராட்டும் பாரதியே!
இன்னும் பல்லாண்டுகள்
வாழ்வாய் நின் கவிகளால்!
![]()