பலதும் பத்தும்

உடல் எடையை குறைத்து அழகாகவும் மெலிதாகவும் மாற வேண்டுமா?

உடல் எடை தாறுமாறாக அதிகரித்திருந்தால் அதை விரைவாக குறைத்து உடல் எடையை மெலிதாக அழகாக மாற்றும் சில விடயங்களை பார்க்கலாம்.

 உடல் எடை

உடல் எடையை நமது கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். இதன் மூலம் உடலில் நோய்கள் வருவதையும் குறைக்க முடியும்.

சில காலைப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விரைவாக உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

உடல் எடையை குறைத்து அழகாகவும் மெலிதாகவும் மாற வேண்டுமா? இதை செய்ங்க | Fast Weight Loss Tips Every Morning Habits Tamil

 

இந்த பழக்ககங்களை எல்லோரும் சரிவர செய்தாலே ஜிம்மிற்கு செல்ல தேவை இல்லை. அந்த வகையில் விரைவாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில காலைப் பழக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.

மேலும் கண்டறிக
திரை விமர்சனம்
உலக செய்திகள்
வர்த்தக செய்திகள்

உடல் எடையை குறைத்து அழகாகவும் மெலிதாகவும் மாற வேண்டுமா? இதை செய்ங்க | Fast Weight Loss Tips Every Morning Habits Tamil

காலையில் எதை செய்ய வேண்டும்?

நேரத்திற்கு தூக்கம்

  • உடல் எடையைக் குறைக்க இரவில் நேரத்திற்கு உறங்கி, நேரத்திற்கு எழுவது அவசியம். காலையில் நேரத்திற்கு எழுவது சிறந்த ஆற்றலை கொடுத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, மன அமைதியைத் தருவதுடன்  மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

நச்சு நீக்கும் பானங்கள்

  • காலையில் எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக  நச்சு நீக்கும் பானங்களை அருந்துங்கள்.  சீரக நீர், எலுமிச்சை நீர், கொத்தமல்லி நீர் மற்றும் வெந்தய நீர் ஆகியவற்றை குடிக்கலாம். இந்த நச்சு நீக்கும் பானங்கள் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகின்றன, உடல் எடை குறைப்பிற்கு உதவுகின்றன, மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன.

உடல் எடையை குறைத்து அழகாகவும் மெலிதாகவும் மாற வேண்டுமா? இதை செய்ங்க | Fast Weight Loss Tips Every Morning Habits Tamil

உடற்பயிற்சி

  • நச்சு நீக்கும் பானத்தைக் குடித்த பின்னர் தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் வேகமான நடைப்பயிற்சி, ஓட்டம், கயிறு தாண்டுதல், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றைச் செய்யலாம்.

காலை சூரிய ஒளி 

  • உடற்பயிற்சிக்குப் பின்னர் சூரிய ஒளியில் இருப்பது வைட்டமின் டி-யை அதிகரிக்க உதவும். இது எலும்புகளின் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமானது. காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை 10-30 நிமிடங்கள் நேரடி சூரிய ஒளியில் இருப்பது இயற்கையாகவே வைட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. இந்த வைட்டமின், எலும்புகளில் கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, செரிமான அமைப்பை வலுப்படுத்தும்.

உடல் எடையை குறைத்து அழகாகவும் மெலிதாகவும் மாற வேண்டுமா? இதை செய்ங்க | Fast Weight Loss Tips Every Morning Habits Tamil

ஆரோக்கியமான காலை உணவு

  • காலையில் வயிறு நிறைய காலை உணவை உண்ண வேண்டும், அரைகுறை உணவை அல்ல. காலை உணவு உண்பதற்கு சிறந்த நேரம் காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆகும்.  மாவுச்சத்து மற்றும் கொழுப்புக்குப் பதிலாக, முட்டை, கோழி இறைச்சி, உலர் பழங்கள் மற்றும் ஓட்ஸ் போன்ற அதிக புரதம் நிறைந்த காலை உணவைச் சேர்த்துக்கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *