உலகம்

ஈரான் தாக்குதலால் சிதைந்த அமெரிக்க இராணுவ முகாம்கள்; காத்திருக்கும் பல ஆயிரம் கோடி செலவு

ஈரான் தாக்குதலில் 7 வளைகுடா நாடுகளில் சேதம் அடைந்த இராணுவ முகாம்களைச் சரி செய்ய பல ஆயிரம் கோடி செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானும் பதிலடி​யாக 7 வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்​களைக் குறி வைத்து ஏவு​கணை, மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் அமெரிக்க வீரர்​கள் சிலர் இறந்​தனர்.

அமெரிக்க இராணுவ முகாம்​களில் உள்ள ரேடார், தகவல் தொடர்பு மையங்​கள், போர் விமானங்​கள், ஓடு தளங்​கள் ஆகியவை பலத்த சேதமடைந்​தன.

அமெரிக்​கா​வின் வான் பாதுகாப்​பை​யும் மீறி ஈரானின் பழமை​யான எப்-5 ரக போர் விமானம், அமெரிக்க இராணுவ முகா​முக்​குள் தாக்​குதல் நடத்​தி​யது.

ஈரான் தாக்​குதலில் அமெரிக்க இராணுவ முகாம்​களில் ஏற்பட்ட சேத விவரங்களை பென்​டகன் முழு​மையாக பகிர​வில்​லை. இந்த விஷ​யத்​தில் வெளிப்​படைத்​தன்மை இல்​லாத​தால், அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசுக் கட்சி எம்​.பி.க்​களே கோபம் அடைந்​துள்​ளனர்.

சேத விவரங்​களைத் தெரிவிக்க வேண்​டும் என அமெரிக்க எம்​.பி.க்​கள் கோரிக்கை விடுத்து பல வாரங்​கள் ஆகி​யும், அது பற்றி எதை​யும் கூறாமல் கூடு​தலாக 200 பில்​லியன் டொலர் நிதி ஒதுக்க வேண்​டும் என பென்​டகன் கோரிக்கை விடுத்​துள்​ளது.

இந்​தாண்டு இராணுவ பட்​ஜெட்​டுக்கு ஏற்கெனவே அமெரிக்க நாடாளு​மன்​றம் 838.5 பில்​லியன் டொலர் அனு​மதி அளித்​திருந்​தது. ஈரான் போர் தொடங்​கிய ஒரு வாரத்​துக்​குள் 11 பில்​லியன் டொலர் செல​வான​தாக அமெரிக்கா தெரி​வித்​திருந்​தது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button